search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பதுக்கல்"

    • போலீசாருக்கு அதிக அளவில் ரோந்து மற்றும் சோதனைகளை தீவிரபடுத்த உத்தரவிடப்பட்டது.
    • குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்து இருந்தது போலீசா ரல் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரத்தில் போலீசார் சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அதில் அவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் அவரிடமி ருந்து 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அதிகாரிகள் மூலம் சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசாருக்கு அதிக அளவில் ரோந்து மற்றும் சோதனைகளை தீவிரபடுத்த உத்தரவிடப்ப ட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீனுவாசன் என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமா ன குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்து இருந்தது போலீசா ரல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரி களின் முன்னிலையில் அதை பதுக்கி வைத்திருந்த வீடு மற்றும் கடைக்கு சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    • ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • ஏரியில் குட்கா,புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிப்பு

    ஊத்துக்கோட்டை:

    தமிழக அரசு குட்கா,புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்ரடெண்ட் சி.பாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் சிறப்பு காவல்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா,புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வருகின்றனர்.

    இந்நிலையில்,நேற்று மாலை சிறப்பு காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா,முருகவேல்,தலைமை காவலர்கள் கமலக்கண்ணன்,தமிழரசன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னம்பேடு கிராமம்,பெரிய காலனி அருகே வாகனங்களை கண்காணித்து வந்தனர்.

    அப்பொழுது அவ்வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பையில் இருபது கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் பொன்ராஜ் (வயது48) என்பதும், திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. 


    மேலும் சின்னம்பேடு ஏரியில் குட்கா,புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து பல்வேறு கடைகளில் விற்பனை செய்வதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஏரியில் பதுக்கி வைத்திருந்த குட்கா,புகையிலை உள்ளிட்ட 180 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த ஆரணி காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து, குட்கா வியாபாரி பொன்ராஜை கைது செய்ததுடன், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோடவிளை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
    • 9 குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் வாலகுருவை கைது செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரி கோவில் பகுதியில் வந்த ஒரு காரை மறித்து அதை சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு மூட்டையில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் திசையன்விளை அருகே உள்ள காளிகுமாரபுரத்தை சேர்ந்த வாலகுரு (வயது 37) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் விற்பனைக்காக குட்காவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில் கோடவிளை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு 8 மூட்டைகளில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 9 குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் வாலகுருவை கைது செய்தனர்.

    இதன் மொத்த எடை 169 கிலோ ஆகும். தொடர்ந்து இவர் எங்கிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்தார். யாரிடம் விற்பனை செய்வதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தார். இதில் தொடர்புடையவர்கள் யார்? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட வாலகுரு நவ்வலடி பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் கணவர் ஆவார்.

    கோவை அருகே 2350 கிலோ குட்கா பதுக்கிய குடோன் உரிமையாளரை கைது செய்த போலீசார் தலைமறைவான வியாபாரிகளை தேடி வருகின்றனர். #Gutkha #GutkhaSeized
    கோவை:

    கோவை கண்ணம்பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் மாவட்டம் முழுவரும் சோதனை நடத்தி குடோன்கள் மற்றும் மளிகை கடைகளில் இருந்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அன்னூரை அடுத்த மசகவுண்டன் செட்டிப்பாளையத்தில் ஒரு குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டு இருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு மளிகை பொருட்களுக்கு இடையே ஏராளமான மூட்டைகளில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து மொத்தம் 2,350 கிலோ எடை கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குடோன் அன்னூரை சேர்ந்த சாந்த குமார்(வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. கோவை கணபதியை சேர்ந்த பட்டு ராஜன், சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த தங்கசிங் ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து பட்டு ராஜன், தங்கசிங், சாந்த குமார் ஆகிய 3 பேர் மீதும் புகையிலை பொருட்கள் தடை சட்டம் 2003 மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் சாந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மளிகை கடை நடத்தி வரும் பட்டு ராஜன், தங்கசிங் ஆகியோர் மளிகை கடை வைத்திருப்பதற்காக குடோனை வாடகைக்கு கேட்டதாகவும், அதன் பேரில் ரூ.1500 மாத வாடகைக்கு குடோனை கொடுத்ததாகவும், குட்கா பதுக்கி வைத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

    தொடர்ந்து சாந்த குமாரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் பட்டு ராஜன், தனசிங் ஆகியோரை தேடி வருகின்றனர். குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய 1 சொகுசு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பட்டுராஜா, தனசிங் ஆகியோர் பிடிபட்டால் தான் எங்கிருந்து குட்காவை வாங்கி வந்தார்கள்? யார்- யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? அவர்களின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்-யார்? என்பது தெரிய வரும். தலைமறைவான இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இருவரையும் செய்ய கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.  #Gutkha #GutkhaSeized



    தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடையின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த 82 கிலோ குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வரலால் என்பவருடைய மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை மறைத்து வைத்திருப்பதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கடையின் மேற்கூரையில் மறைத்து 3 மூட்டைகளில் குட்கா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளை வெளியே எடுத்து பார்த்தனர். அதில் மொத்தம் 82 கிலோ குட்கா இருந்தது. இவற்றை பறிமுதல் செய்து மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்டமாக மளிகை கடையின் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேல் நடவடிக்கை எடுப்பதற்காக  தாதகாப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து மாரியப்பன் கூறியதாவது:-

    மளிகை கடையில் குட்கா விற்பனை செய்வதாக எங்களுக்கு ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சோதனையிட்டு, குட்காவை பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும். கடந்த 3 மாதத்தில் இதுவரை 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள குட்காவை விற்பனை செய்தால் அல்லது பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×